2011 © muthupettai dharga.Designed and maintainded by Miduna technologies

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னர்ரஹிம்
அஸ்ஸலாமு அலைக்கும்
உலக மருத்துவ கலாநிதி மாமேதை ஹஜரத் ஹக்கீம்
ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ்-முத்துப்பேட்டை
     அனைத்துப் புகழும் அகிலத்தாரின் ரப்பாகிய அல்லாஹ்வுக்கே உரியது

இறுதி நபியாக சம்பூரணமாக்கப்பட்டு இறைவனால் அருளப்பட்ட அனைத்து வேதங்களிலும் சிறப்பிக்கப்பட்ட நபியாக மனிதருள் மாணிக்கமாக, இருளின் நிலவாக, மனிதப் புனிதராக, அகிலத்தின் அருட்கொடையாக அண்ணல் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோன்றினார்கள். அன்னலாரின் வருகையால் அகிலம் மகிழ்ந்தது அகிலம் படைத்த இறைவன் அண்ணலாரை அகிலத்தார்கெல்லாம் அருட்கொடையாக தந்து இந்த அகிலத்தை சிறப்பாக்கினான்.நபிமார்களின் வருகைக்குப் பின்னால் சத்தியத்தை நிலை நிறுத்துவதற்காக வந்த தியாகிகளே வலிமார்கள் எனப்படும் இறைநேசச் செல்வர்கள்.

 

இவர்கள் இறைவனுக்கு கட்டுப்பட்டு இறைதூதர் அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை அனுவளவும் பிசகாமல் தன் வாழ்நாளில் ஒரு நிமிடம் கூட தவறவிடாமல் திருமறை திருக்குர் ஆனின் போதனைகளை நெஞ்சில் ஏந்தி இவ்வையகத்துல் வாழவாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் வலிமார்கள் எனப்படும் இறைநேசச் செல்வர்கள். இவர்கள் செய்த தியாகத்தின் காரணமாக இறைவன் இவர்களுக்கு கராமத் என்னும் அற்புதங்களைக் கொண்டு சிறப்பாக்கினான். அல்லாஹ் கூறுகின்றான் (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள், அவர்களுக்கு எவ்வகை அச்சமுமில்லை மேலும் அவர்கள் கவலையுறவுமாட்டார்கள்.(10;:62)அவர்கள் நம்பிக்கைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள் (10:63).இன்னும் அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் நற்செய்தியுண்டு. அல்லாஹ்வின் வார்த்தைகளில் எத்தகைய மாற்றமும் கிடையாது. இதுவே மகத்தான வெற்றியாகும். (10:64)

 

என்னையும் என்னை சார்ந்தவர்களையும் பின்பற்றுங்கள் எனது தோழர்கள் சஹாபா பெருமக்கள் வானில் திகழும் நட்சத்திரம் போன்றவர்கள் இவர்களில் யாரை பின்பற்றினாலும் வழி தவற மாட்டீர்கள்; (நபிகள் நாயகம்).இறைவன் கூறுகின்றான் எவன் என்னுடைய இறைநேசரை பகைக்கின்றானோ அவன் என்னுடன் போர் புரயட்டும்  (ஹதிது குத்ஸி)என்னுடைய இறைநேசர்கள் (அவுலியாக்கள்) எனது பரிவட்டத்திற்குள்ளிருப்பார்கள் என்னை தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள்.(ஹதிது குத்ஸி) 'அன்பியாக்களுடைய உடல்களை மண் தின்பதை இறைவன் நிச்சயமாக பூமிக்கு (ஹறாமாக்கிவிட்டான்) தடுத்துவிட்டான்'.  (நபிகள் நாயகம் ஆதாரம் ஆபூ தாவூது) இறை  நேசச் செல்வர்கள் செய்த தியாகத்தின் காரணமாக அருள் மறை திருக்குர் ஆனில் இறைவன் இறைநேசர்களை இவ்வாறாக புகழ்ந்துறைக்கின்றான்.

 

'அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொண்டான்

அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டார்கள்'

 

இன்று கோடிக்கணக்கான மனிதர்களுடைய இதயங்களில் நீங்காத இடம் பெற்று நிலைத்து நிற்கும் வலிமார்கள் எனப்படும் இறைநேசச்செல்வர்கள் அல்லாஹ் ரசூலுக்கு மாற்றமாக எப்போதும் சிந்தித்ததில்லை செயல்பட்டதுமில்லை மறுமைக்காக இவ்வுலக வாழ்க்கையை துறந்து மனதை அறிந்த மஹான்களாக அனைத்து மக்களுக்கும் வழிகாட்டியாக களங்கரை விளக்கமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று நல்லவர்கள் அனைவர்களாலும் நேசிக்கப்டுகின்ற நல்லடியார்கள் என்று அழைக்கப்படும் வலிமார்கள் வாழ்நாள் முழுதும் நல்ல வார்த்தைகளை கொண்டும் நல்ல வாழ்க்கையினைக் கொண்டும் இறைவனுக்காக இறை வழியில் நடந்த காரணத்தால் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் மக்களுக்கு மகத்தான சேவையை கனவிலும் நினைவிலும் ஆற்றிக் கnhண்டிருக்கிறார்கள் இறைநேசச் செல்வர்கள் செய்து வருகின்ற அறப்பணிகள் இவ்வையகத்துல் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

அழிந்து போகக்கூடிய இவ்வுலகத்தில் அழிந்து போவதற்காக படைக்கப்பட்டுள்ள மனிதர்கள் எதற்காக அழிவே இல்லாத இறைவனுக்காக உழைக்க வேண்டும்.அழிந்து போகக்கூடிய தன் உடலை அழிவேயில்லாத இறைவனை கொண்டு அழிந்து போகாமல் பாதுகாத்து கொள்வதற்காகதான்.அல்லும் பகலும்(மஹான்கள்) இறைநேசர்கள் வலிமார்கள் அல்லாஹ்வுடைய பாதையில் நடந்து வந்தார்கள் அழிவில்லாத உடலையும் உயிரையும் அதன் மூலம் பெற்றுக் கொண்டார்கள.;

 

அல்லாஹ் (இறைவனை) அறிந்திடாத மனிதனை மரணம் கொலை செய்கிறது. அல்லாஹ்வை அறிந்தவர்களால் மரணம் கொலை செய்யப்படுகின்றது. இந்த முறையில் மரணத்தை மரணிக்க செய்த மஹான்கள் மண்ணுக்கு மேலே இருந்தாலும் சரி, மண்ணுக்குள் மறைந்து இருந்தாலும் சரி, அவர்களுடைய ஆற்றல்கள் வெளியாக இந்த மண் எப்போதும் தடையாக இருந்ததில்லை.

 

வலிமார்கள் எனப்படும் இறைநேசர்கள் இறைவனுக்காக வாழ்ந்த காரணத்தால் மரணத்தை வென்ற மஹான்களாக உலகில் அனைத்து பகுதிகளிலும் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இறைவழிபாட்டில் தன்னுயிரை தியாகம் செய்த காரணத்தால் மரணத்தை மரணிக்க செய்ய முடிந்தது, பசியை பசிக்க வைக்க முடிந்தது, தாகத்தை தாகிக்க வைக்க முடிந்தது, உறக்கத்தை உறங்க வைக்க முடிந்தது. அச்சத்தை அச்சப்பட வைக்க முடிந்தது. எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை எட்டி உதைக்க முடிந்தது. தனக்கு மிஞ்சியதை கொடுப்பது தர்மம் தனக்கு உள்ளதை கொடுப்பது தயாளம் தன்னையே கொடுப்பது தியாகம் இறைவனுக்காக முற்றிலும் அர்பபணித்துக் கொண்ட தியாகிகளே வலிமார்கள் எனப்படும் இறை நேசச் செல்வர்கள். இவர்கள் செய்த தியாகத்தை சொல்ல வேண்டுமானால் மிகையாகாது.அல்லாஹ் இறைநேசச் செல்வர்களுக்கு தலைவராக மாபெரும் மஹாத்மாவாக மண்ணகமும், விண்ணகமும,; போற்றும் ஞானியாக முகையதீன் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) ஆண்டகை அவர்களை உலகிற்கு அனுப்பினான். இவர்கள் ஈராக் நாட்டின் பகுதாதில் அடக்கமாகி அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பின்னால் கோடிக்கணக்கான இறைநேசச் செல்வர்கள் உலகம் அழியும்வரை தோன்றிக் கொண்டிருப்பார்கள் என்பது இறைவேத வாக்கு. இந்த மஹான்கள் மறைந்து வாழும் இடங்களிளெல்லாம் ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு மகத்துவம் இருக்கின்றது.

 

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் அடக்கமாகி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் மஹான் ஹஜரத் ஹக்கீம் ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் ஆண்டகை அவர்களின் அற்புத வரலாற்றினை இணையதள மூலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தந்திருக்கின்றோம் அனைவரும் எங்கள் இணையதளத்தின் மூலமாக பார்த்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

யா அல்லாஹ் எங்கள் பாட்டனார் ஹஜரத் ஹக்கீம் ஷெய்குதாவூது காமில் வலியுல்லாஹ் ஆண்டகை அவர்களின் வரலாற்றினைப் பார்த்து பயனடையக்கூடிய அனைவருடைய நீண்ட ஆயுளையும் நிறைந்த செல்விக முன்னேற்றத்தையும் நோய்நொடியில்லா நல்வாழ்வையும் வாழ்வையும் ஈமானுடைய நூரையும், ஈருலக நல்வாழ்வையும,; எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழவதற்கு உனது கருணையாலும் ஈருலக ரட்சகர் எம்பெருமான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் நல்லாசி கொண்டும் சங்கைகுரிய நபிமார்கள் சிறப்பிற்குறிய வலிமார்கள் (இறை நேசர்கள்) குத்புமார்கள், நாதாக்கள், நல்லோர்கள், எங்கள் பாட்டனார் அதிமேன்மைதங்கிய மஹான் ஹஜரத் ஹக்கீம் ஷெய்கு தாவூது காமில் வலியுல்லா ஆண்டகைஅவர்களின் துஆபொருட்டாலும் எங்கள் யாபேர்களுடைய நாட்டங்களை நிறைவேற்றுவாயாக ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆமீன்.

 

 

வரலாறு

 

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹா மேன்மை தங்கிய மஹான் ஹக்கீமுல் ஹூக்கமா செய்யிதினா ஷெய்குல் அஃலம் குத்பேரப்பானி ஆரிபு பில்லாஹி வஷ்ஷெய்கு சமதானி அஷ்ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் ஆண்டவர்கள் அடக்மதாகி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மகத்துவமிக்க ஒரு மாபெரும் புனித ஸ்தலமாகும். மஹான் அவர்களை கருணை வள்ளல்இ காரணக்கடல்இமருத்துவ வேந்தர் என்ற சிறப்பு சொற்களால் மக்கள் போற்றி வருகிறார்கள்.தர்ஹா ஜாம்புவானோடை கிராமத்தில் அமைந்திருந்தாலும் உலக மக்களால் முத்துப்பேட்டை தர்ஹா என போற்றி வரப்படுகிறது   

 

மஹான் அவர்களின் அருள் வேண்டி உலகின் பல பகுதிகளிளிலிருந்தும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், சவுதிஅரேபியா, இலங்கை, அமெரிக்கா, குவைத், துபாய் முதலிய நாடுகளிலிருந்தும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கில் சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் வந்து அருள் பெற்றுச் சென்று கொண்டிருக்கின்றார்கள். தீராத நோய்களும், ஓடாத பேய்களும் மருந்துகளுக்கும் மந்திரங்களுக்கும் கட்டுப்படாத மனக்குழப்பங்களும் மனிதர்களை நிலைத் தடுமாறச் செய்திடும் வஞ்சினை, செய்வினை, ஏவல்,பில்லி, சூனியங்களும், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்களும் மஹான் அவர்களின் பேரருளால் தீர்க்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. இது ஏதாவது ஒரு நாள் மட்டும் நிகழ்வு அல்ல அன்றாடம் நடக்கும் அற்புத நிகழ்வுகள் ஆகும்.

 

மேன்மை தங்கிய மஹான் ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் அவர்கள் நபி மூஸா(அலை) அவர்களின் கவ்மில் இஸ்ராயில் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஜாம்புவானோடை கிராமம் அடர்;ந்த புதர்களால், மண்டிய மரம், செடி, கொடிகயாலும் நிறைந்த காடு ஆகம். இப்பகுதி மக்களால் இன்றும் கூட அக்கரைக்காடு என்று இதை அழைப்பது உண்டு. காடுகளை அழித்து விவசாயம் செய்ய முனைந்த கருப்பையாக் கோனார் எருது பூட்டி உழுதழட இரத்தம் பீரிட்டு அடித்து, கண்பார்வையற்று மயங்கி மூர்ச்சையாகிவிடுகிறார். உடனே பாவா அவர்களுடைய தரிசனமும் அசிரீரி வாக்கும் அவருக்கு கிடைக்கிறது. நான் ஒரு இஸ்லாமிய இறை நேசர். எனது பெயர் ஹக்கீம் ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ். நீர் ஏர் உழுத இடத்தில் தான் நான் அடக்கமாகி இருக்கிறேன், கவலைப்படவேண்டாம். மயக்கம் நீங்கி பார்வை தெரியும். உடனடியாக நாச்சிக்குளம் சென்று அங்கு எனக்கு பணிவிடைகள் செய்வதற்காக காத்திருப்பவர்களை அழைத்து வாரும் என்று சொல்கிறார்கள். இந்த நேரத்தில் கோனாரின் மனைவி உணவு எடுத்து  வந்து சேருகிறார். ஏர் அப்படியே இருக்கிறது. கணவர் கீழே விழுந்து கிடக்கிறார். முகத்தில் இரத்தம் வழிகிறது. அதிர்ச்சியோடு கணவரை உசுப்புனிறார். நினைவு திரும்பிய கோனார் உழுந்து நடந்த விபரங்களை சொல்கிறார். அங்கே இரு இஸ்லாமிய சகோதரர்கள் இவர்களை எதிர்பார்த்து தயாராக இருக்கிறார்கள். நடந்த விபரத்தை அவர்களிடம் சொல்லும் முன்பே இந்த விபரங்களை பாவா அவர்கள் தங்களிடம் அறிவித்து விட்டதாக சொல்லி கோனாரோடு ஜாம்புவானோடை வந்து சேர்ந்த போது நிலத்தில் ஏர் உழுத அடையாளம் எல்லாம் மறைந்து கபுர்(சமாதி) கூட்டப்பட்டு கால்மாடு தலமாடு அடையாளத்திற்கு இரண்டு எலுமிச்சம் பழங்களும் வைக்கப்பட்டு இருக்கிறது. நாச்சிக்குளத்திலிருந்து வந்த கான் சகோதரர்கள் பத்தி கொளுத்தி, சாமிபிராணி போட்டு, விளக்கு ஏற்றி கபுருக்கு போர்வை போர்த்தி பாத்திஹா யாசின் ஓதி துஆ செய்து கபுருக்கு மேல் கீற்றுக்கொட்டகை போட்டு பகல் நேரங்களில் மட்டும் வந்திருந்துவிட்டு இரவில் விளக்கு ஏற்றிவைத்து விட்டு சென்று கொண்டு இருந்துள்ளார்கள்.

 

சில வருடங்கள் கழித்து இவ்வழியாக தஞ்சை மன்னர் அச்சுதப்ப நாயக்கர் தனது பரிவாரங்களுடன் வந்த போது ஆற்றங்கரையில் மன்னரின் பட்டத்து யானை கீழே விழுந்து படுத்துக்கொண்டது. எவ்வளவு முயற்சித்தும் எழும்பாமல் போகவே மஹான் பாவா அவர்களுடைய ஜியாரத்தில் இருந்து புனித சந்தனம் தப்ருக் (பிரசாதம்) எடுத்துச் சென்று யானையின் நெற்றியில் வைக்க, உடனே எழுந்து விடுகிறது. மஹான் அவர்களுடைய மகிமையையம், அற்புதத்தையும் அறிந்து வியந்த அரசர் தனது பரிவாரங்களுடன் நடந்தே வந்து பாவா அவர்களை வணங்கி மரியாதை செய்து பிரர்த்தித்து உடனடியாக தற்போது தர்ஹா அமைந்துள்ள இடம் உட்பட 51ஃ2 வேலி நிலத்தையும். ஷேக் தாவூது ஆண்டவர் தர்ஹா என்ற பெயரில் பட்டயம் போட்டுக் கொடுத்து சென்றுள்ளார்கள். இன்று அரசரின் யானை விழுந்த இடத்தை 'யானை வழுந்தான் கிடங்கு' என்று மக்களால் சொல்லப்படுகிறது. அதன் பிறகு படிப்படியாக தர்ஹா கட்டடமாக கட்டி முடிக்கப்பட்டது. ஆண்டுதோறும் இஸ்லாமிய ஹிஜ்ரி வருடத்தில் ஜமாத்துல் அவ்வல் பிறை 1-ல் கொடியேற்றமும், பிறை 10ல் சந்தனக்கூடும், பிறை 14ல் கொடி இறக்கமும் பெரிய ஹந்தூரி வழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த உரூஸ் என்னும் பெரிய ஹந்தூரி விழாவில் பல்லாயிரக்கணக்கான இந்து, முஸ்லீம் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். வரமுடியாதவர்கள் தங்களின் காணிக்கைகளை அஞ்சல் மூலமாக அனுப்பி கோரிக்கைகளை நிறைவு செய்து கொள்கிறார்கள். மேன்மை தங்கிய பாவா அவர்களை நாகூர் ஆண்டவர் ஹஜரத் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களும், கீழக்கரை ஞானக்கடல் சதக்கத்துல்லா அப்பா அவர்களும். பல்லாக்கு தம்பி ஒலியுல்லாஹ் அவர்களும், பொதக்குடி நூர் முகம்மது ஷா வலியுல்லாஹ் அவர்களும் இன்னும் பல வலிமார்களும் தங்களின் ஹயாத்தோடு வந்து தரிசித்து சென்று இருப்பது மிகப்பெரிய சிறப்பாகும்.

 

மேன்மை தங்கிய மஹான் பாவா அவர்களின் சன்னிதானத்தில் நோய்வாய்ப்பட்டவர்களும், பேய்,பிசாசு பிடித்தவர்களும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் வஞ்சினை, செய்வினை, ஜின், சைத்தான், பில்லி, சூனியங்களால் பாதிக்கப்பட்டவர்களம் 11 நாட்கள், 41 நாட்கள் என நேர்த்தி கடனுக்கு தங்கி இருந்து நல்ல சுகம் பெற்று செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கழமை இiவு கிழமை இரவாக கருதப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து, முஸ்லீம் பக்தர்கள் வந்து இரவு தங்கி இருந்து காலையில் செல்கிறார்கள். இஸ்லாமிய வழக்கப்படி வெள்ளி இரவு என்பது வியாழன் மாலை 6 மணிக்கே தொடங்கிவிடும். அன்று முஸ்லீம்களைவிட இந்து பக்தர்கள் அதிக அளவில் வந்து தங்கி செல்வார்கள்.

 

மேன்மை தங்கிய பாவா அவர்களின் சன்னிதானத்தில் தங்கி இருக்கும் நோயாளிகளுக்கும் தீவினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கனவிலும், நினைவிலும் சுகம் அருளப்படுகிறது. அவர்களுடைய வியாதிகளுக்கு தகுந்தவாறு ஆப்ரேஷன் மூலமாகவும்வாய்வழியாகவும். கிளாஸ,; ஓடு, முடி, எலுமிச்சம்பழம் உருவங்கள் போன்றவைகள் எடுக்கப்படுவதை கண்கூடாக காணப்படுகிறது. தீராத நோய்களுக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு ஆப்ரேஷனும் மஹான் அவர்களால் நடத்தப்படுகிறது. இதுபோன்ற அற்டபுதங்களும் அதிசயங்களும் கற்பனைக்கு எட்டாத மனித அறிவுக்கு புலப்படாத விஷயங்கள் அல்லாஹ்வின் N பரருளால் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வலிமார்களுக்கு கராமாத்துகளை நிகழ்த்தும் வல்லமையை பேரருளாரின் அல்லாஹ் வழங்கி இருக்கிறான். அதனால்தான் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் புரியும் ஒரு அற்புத மருத்துவசாலையாகவும், அருள்மனம் கமழும் சோலையாகவும் அண்ணலின் பீடம் திகழ்கிறது. மேன்மை தங்கிய மஹான் பாவா அவர்கள் இங்கு அடக்கமாகிய நாள் தொட்டு இன்று வரை எண்ணலடங்கா அற்புதங்கள் பல நிகழ்ந்து வருகிறது.

 

தமிழகத்தின் கவர்னராக மேதகு கே.கே.ஷா அவர்கள் இருந்த பொழுது பாவா அவர்களை தரிசிக்கும் பொருட்டு இங்கு வந்து தர்ஹா ஷிஃபா குளம் எங்கே என்று கேட்டு தர்ஹாவுக்கு எதிர்புறம் அமைந்துள்ள புனித ஷிஃபா குளத்திற்கு சென்று கை, கால், முகம் கழுவி மூன்று மிடர் தண்ணீரும் குடித்துவிட்டு பாவா அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு உள்ளே சென்று சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்து பிரார்த்தனை செய்து விட்டு வெளியில் வந்து தனக்கு கிடைத்த ஆண்டவர்களின் அருளைப்பற்றி சொல்கிறார். ஹிந்து பத்திரிக்கையில் கட்டுரை வெளியாகி இருந்தது. அதைப்படித்து முத்துப்பேட்டை ஆண்டவரைப்பற்றியும் புனித ஷிஃபா குளம் மகிமை பற்றியும் தெரிந்து கொண்டேன். எனக்குள்ள குறை நீங்க வேண்டி இங்கு வந்து திருக்குளத்தின் நீரை பருகி அதில் கை, கால், முகம் கழுவி ஆண்டவரை கரிசித்தேன். இப்போது எனக்கு நல்ல சுகமும் பரம திருப்தியும் கிடைத்துவிட்டது. எனக்கூறிபோது கசர்னருடன் வந்த அதிகாரிகள் அனைவரும் குளத்திற்கு சென்று கை, கால், முகம் கழுவி தண்ணீரையும் குடித்து சென்றுள்ளார்கள் என்பது சமீப காலத்தில் நடந்த சம்பவமாகும். மேன்மை தங்கி பாவா அவர்களை நாடி வரக்கூடியவர்களக்கு பாவா அவர்களின் ஜியாரத்து கப்ரிலே பூசி இருக்கும் சந்தனமும், மேலே போடப்பட்டுள்ள பூவும், திருவிளக்கில் எரித்த எண்ணையும், புனித ஷிஃபா குளத்து தண்ணீரும் நோய்தீர்க்கும் அருமருந்துகளாக பயனபட்டு வருகிறது.

 

பாவா அவர்களின் ஜியாரத் 60 அடியாகும் ஜயாரத் கதவு தினமும் காலை சுபுஹூக்கு பாங்கு கொ:த்தவுடன் திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூடப்படுகிறது. ஒவ்வொரு திங்கள்கிழமை இரவும் மஹ்ரிபு தொழுகைக்குப் பின்னால் தாவூதியா மஜ்லிஸில் மௌலூது ஷரீப் ஓதப்படுகிறது. மேன்மை தங்கிய ஹக்கீம் செய்கு தாவூது காமில் வலியுல்லாஹ்  அவர்களை நாடிவரக்கூடியவர்கள். தங்களுடைய நாட்டங்கள் கபூலா நிய்யத்து வைத்துக்கொண்டு பாவா அவர்களின் புனித ஜீயாரத்திற்கு புனித முறாத ஹாசில் போர்வை போர்த்துவதுஅல்லாஹ் பெயரால் சதக்கா (தர்மம்) கொடுப்பதும் நீண்ட ஆயுளுக்காக வேண்டி அல்லாஹ் பெயரில் நிய்யத்து வைத்து. உயிரோடு ஆடு வாங்கி கொடுப்பதும், பாவா அவர்கள் கனவில் சொன்ன மிக முக்கிய காரியங்களாகும். இது தொன்று தொட்டு நடந்து வருவதோடு இதன் மூலம் அவர் அவர்களுடைய எண்ணங்களும் அல்லாஹ்வின் உதவியால் ஈடேறி வருகிறது. எந்த நிய்யத்தும் இல்லாவிட்டாலும் கூட பாவா அவர்களுக்கு மரியாதை செய்து சங்கை செய்யும் பொருட்டு புனித ஜியாரத்திற்கு புனித போர்வை போர்த்துவது ஏற்றமான செயலாகும். என்று பெரியவர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன் ஆமன்மை தங்கிய மஹான்ஹக்கீம் ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் அவர்களின் கிருபை துஆ பரக்கத்தைக் கொண்டு நம் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வத்தையும், நோயற்ற நல்வாழ்வையும், சரீர சுகத்தையும், குன்றா நலத்தையும், ஈமானுடைய நூரையும், எல்லா வளத்தையும், ரஹ்மத்தையும் சிறப்பாக்கித் தந்து தொழில்கள், வியாபாரம், விவசாயம், உத்யோகம் முதலியவைகளில் மேன்மையையும் முன்னேற்றத்தையும் தந்து, கண் திஷ்டிகள், பொறாமைகள், போட்டிகள், ஜின். சைத்தான், பில்லி, சூனியங்கள் ஏவலபாடு, முசீபத்துகள், வஞ்சினை, செய்வினைகள் போன்ற எந்த விதமான முசீபத்துகளும், தீய சக்திகளும் அணுகாமல் காப்பாற்றி நிம்மதியாக நலமோடும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் இடம் இருகரம் ஏந்தி துஆ செய்கிறோம்.

வல்ல ரஹ்மான் கபூல் செய்வானாக ஆமீன்

 

  

எஸ்.ரபீக் அஹமது லெப்பை

எஸ்.ராஜா முஹம்மது லெப்பை

த.பெ.கே.எஸ்.எம்.சேகனா லெப்பை

ரபீக் இல்லம்

ஹஜரத் ஹக்கீம் ஷெய்குதாவூது காமில்

வலியுல்லாஹ் தர்;ஹா ஷரிபு

முத்துப்பேட்டை-614 738

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு

செல்: 9943323483